தக் லைஃப் படம் 100 கோடி கலெக்சன்? வாய்ப்பில்லை ராஜா… பரிதாபகரமான வசூல் நிலவரம்!

2 weeks ago 20
ARTICLE AD BOX

சுமாரான வரவேற்பு 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. “நாயகன்” திரைப்படத்திற்குப் பிறகு 37 வருடங்கள் கழித்து கமல்ஹாசன்-மணிரத்னம் காம்போவில் இத்திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் பலரும் ஆவலோடு இத்திரைப்படத்திற்குச் சென்றனர். ஆனால் கடைசியில் ஏமாந்துப்போய்தான் வெளியே வந்தனர். 

ஒரு காட்சி கூட சொல்லும்படியாக இல்லை என ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். இது ஒரு மோசமான திரைப்படம் எனவும் விமர்சனங்கள் வெளிவந்தன. இவ்வாறு படு மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள “தக் லைஃப்” திரைப்படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 

thug life collection report

வாய்ப்பில்லை ராஜா

“தக் லைஃப்” திரைப்படம் கடந்த ஜூன் 5 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வெளியானது. வெளியான முதல் 4 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.40.75 கோடி வசூலானதாக தகவல் வெளிவந்தது. ஆனால் படம் வெளியாகி தற்போது ஒரு வாரம் முடிவடையவுள்ள நிலையில் உலகளவிலேயே ரூ.89 கோடியே வசூலாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக இந்தியாவில் மட்டும் ரூ.46 கோடிதான் வசூல் செய்துள்ளதாம். இந்த நிலை நீடித்தால் 100 கோடி வசூலை நெருங்கவே வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான “இந்தியன் 2” திரைப்படம் முதல் வாரத்தில் உலகளவில் ரூ.125 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • thug life movie 100 crore collection possible or not தக் லைஃப் படம் 100 கோடி கலெக்சன்? வாய்ப்பில்லை ராஜா… பரிதாபகரமான வசூல் நிலவரம்!
  • Continue Reading

    Read Entire Article