ARTICLE AD BOX

அரசு பள்ளியில் விஜயதசமி அன்று மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து தொட்டியை சுத்தம் செய்ய வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பிள்ளையார்தாங்கள் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்
இந்த நிலையில் விஜயதசமி என்பதால் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில் புதிதாக வரும் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கும் பள்ளியில் ஆசிரியர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தண்ணீர் அசுத்தமாக உள்ளதால் பள்ளி மாணவர்களை வரவழைத்து ஏணி மூலம் மேலே ஏற வைத்து டேங்க்கை சுத்தம் செய்ததாக தெரிகிறது.
இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பகுதி கிராம மக்கள் கூறுகையில் பள்ளி மாணவர்களை ஏற்றி டேங்க்கை சுத்தம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்
மேலும் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வர நிலையில் ஒரே ஒரு ஆசிரியர் தான் பாடம் நடத்தி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
The station தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்… ஆசிரியர் மீது புகார்..!! appeared archetypal connected Update News 360 | Tamil News Online.