தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

1 month ago 19
ARTICLE AD BOX

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

டெல்லி: டெல்லியில், இன்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டாவைச் சந்தித்துப் பேசினேன்.

மாநிலத் தலைவராக எனது கருத்தை கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளேன். பாஜக தேசியத் தலைவர் தேர்தல், மாநிலத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கட்சி நலனை விட தமிழக நலனே முக்கியம். தேர்தலுக்கு ஓராண்டு உள்ள நிலையில், தற்போதே கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியமில்லை.

2026ஆம் ஆண்டு தேர்தலைப் பொறுத்தவரை, திமுகவே பாஜகவின் எதிரி. அதனை ஆட்சியில் இருந்து அகற்றுவதே நோக்கம். 2026ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் தமிழக மக்களின் நலனுக்கான தேர்தல். திமுகவின் தவறைச் சுட்டிக்காட்டுவதில் பாஜகவே முதன்மையாக உள்ளது.

Annamalai about TVK vijay

கட்சி தொடங்கி எத்தனை முறை வெளியே வந்தார் விஜய்? மைக்கில் பேசுவது மட்டும் அரசியல் இல்லை, களத்தில் நின்று வேலை பார்ப்பதே அரசியல். தினமும் போராடுவது ஒரு அரசியல், கட்சி தொடங்கி மூன்று முறை வெளியே வருவது ஒரு அரசியல். மீடியா வெளிச்சத்திற்காக பிரதமர் குறித்து பேசுகிறார் விஜய். காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல. யாருக்கு யார் எதிரி என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திடீரென ஒரு ஆடு.. திருமாவை காலி செய்யும் திமுக.. ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!

முன்னதாக, இன்று சென்னையில் நடைபெற்ற தவெக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவுக்கு மறைமுகமாக பாஜக உதவுவது போலவும், தமிழகம் மோடி ஜிக்கு அலர்ஜி என்றும், 2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்றும் கூறியிருந்தார்.

  • முடியல..கெஞ்சி கேக்குற விடுங்க…வைரலாகும் தமன்னா வீடியோ.!
  • Continue Reading

    Read Entire Article