ARTICLE AD BOX
டாப் நடிகை
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் குழந்தை நட்சத்திரமாக பல ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கில் “தேசமுடுரு” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தென்னிந்திய சினிமா உலகில் டாப் நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.
தொழிலதிபருடன் திருமணம்
ஹன்சிகா மோத்வானி கடந்த 2022 ஆம் ஆண்டு சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில்தான் ஹன்சிகாவும் கதூரியாவும் விவாகரத்து செய்யவுள்ளதாக சமீப நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன.

ஹன்சிகா மீது புகார்
ஹன்சிகாவும் அவரது தாயாரும் தன்னை கொடுமைப்படுத்துவதாக கதூரியாவின் தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஏற்கனவே ஹன்சிகாவுக்கும் கதூரியாவுக்கும் இடையே பிரச்சனைகள் போய்க்கொண்டிருந்ததால் ஹன்சிகா சமீப மாதங்களாக தனது தாயார் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் இது குறித்து ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கதூரியாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இருவருக்கும் இடையே விவாகரத்து நடக்கவுள்ளதாக பரவி வரும் செய்திகளில் உண்மை இல்லை” என கூறியுள்ளார். இதன் மூலம் ஹன்சிகா குறித்த விவாகரத்து தொடர்பான செய்திகள் வதந்தி என தெரிய வருகிறது.
