தனது பிறந்தநாளில் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கும் செய்தியைச் சொன்ன இளையராஜா? வேற லெவல்!

4 weeks ago 26
ARTICLE AD BOX

இசைஞானி அவதரித்த தினம்

இசைஞானி என்று இசை ரசிகர்களால் போற்றப்படும் இளையராஜா இன்று தனது 82 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். கிட்டத்தட்ட மூன்று தலைமுறை இசை ரசிகர்களின் மனதை ஆட்கொண்டு தமிழ் இசை உலகை கட்டி ஆண்டு வருகிறார் இளையராஜா. 

ilaiyaraaja perform symphony in tamilnadu at august 2

அவரது உடலுக்குதான் வயதாகியதே தவிர மனதிற்கு அல்ல. தனது இசையால் தற்காலத் தலைமுறையினரையும் ரசிக்க வைக்கும் அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்றார்போல் தனது இசையை மேம்படுத்திக்கொண்டே வருகிறார். இன்று அவரது 82 ஆவது பிறந்தநாளில் தமிழக முதல்வர் உட்பட பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தரமான அறிவிப்பு!

தனது 82 ஆவது பிறந்தநாளான இன்று, இளையராஜா தனது ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியை அறிவித்துள்ளார். அதாவது இளையராஜா சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் இசையமைத்த சிம்பொனியை வருகிற ஆகஸ்து மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் அரங்கேற்றவுள்ளார். 

இது குறித்து இளையராஜா பேசியபோது, “இந்த பிறந்தநாளில் ரசிகர்களாகிய உங்களுக்கு ஒரு இனிய செய்தியை அறிவிக்க இருக்கிறேன். அது என்னவென்றால் வருகிற ஆகஸ்து 2 ஆம் தேதி நான் லண்டனில் இசையமைத்த அதே இசை நிகழ்ச்சியை அதே ராயல் பிலாமார்னிக் ஆர்கஸ்ட்ராவுடன் தமிழ்நாட்டில் என்னுடைய தமிழக மக்களுக்கு முன்னால் இசைக்கப்போகிறேன் என்ற நல்ல செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன்” என அறிவித்துள்ளார். இச்செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

  • ilaiyaraaja perform symphony in tamilnadu at august 2 தனது பிறந்தநாளில் ரசிகர்களை ஸ்தம்பிக்க வைக்கும் செய்தியைச் சொன்ன இளையராஜா? வேற லெவல்!
  • Continue Reading

    Read Entire Article