ARTICLE AD BOX
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் இவர்களுடன் யோகி பாபு, ஷிவதா, சுவாஸிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இத்திரைப்படத்திற்கு முதலில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலகினார். அதன் பின் சாய் அப்யங்கர் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக உள்ளே நுழைந்தார். இத்திரைப்படத்தை எஸ் ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.
 இதனிடையே இத்திரைப்படம் கருப்பசாமி தெய்வத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்திற்கு “வேட்டை கருப்பு” என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு “கருப்பு” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி என்ற பெயர் இருக்கும் இடத்தில் R J B என்று இடம்பெற்றுள்ளது. தனது பெயரை சுருக்கி RJB என்று வைத்துள்ளார் ஆர்ஜே பாலாஜி. இப்பெயர் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
 
 
                        4 months ago
                                57
                    








                        English (US)  ·