ARTICLE AD BOX
யுவன் ஷங்கர் ராஜா
இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது 17 ஆவது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார் யுவன். இளையராஜா எந்தளவுக்கு புகழை பெற்றாரோ அதே அளவுக்கான புகழை யுவன் ஷங்கர் ராஜாவும் பெற்றார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 90ஸ் கிட்களின் பால்ய பகுதிகளை மிகவும் இனிமையாக்கியவர் யுவன் ஷங்கர் ராஜா. இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது 8 வயதில் போட்ட ஒரு ட்யூனை இளையராஜா தனது பாடல் ஒன்றில் பயன்படுத்தியுள்ளாராம்.
என்ன பாடல்?
1987 ஆம் ஆண்டு பிரபு, ராதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆனந்த்”. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் “பூவுக்கு பூவாலே” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலில்தான் யுவன் ஷங்கர் ராஜா 8 வயதில் போட்ட ட்யூன் ஒன்றை இளையராஜா பயன்படுத்தியிருந்தாராம். இவ்வாறு ஒரு தகவலை இளையராஜாவே ஒரு விழாவில் சொன்னதாக செய்திகள் தெரிவிக்கின்றன.