ARTICLE AD BOX
எல்லாம் மகனுக்காக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் நெப்போலியன். இவர் 1993 ஆம் ஆண்டு ஜெயசுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தனுஷ், குணால் என இரு மகன்கள் உண்டு. இதில் மூத்த மகனான தனுஷ் நான்கு வயதில் இருந்தே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தனுஷால் எழுந்த நடக்க முடியாமல் போனது.
தனது மகனின் மருத்துவ சிகிச்சை மற்றும் பிற வசதிகளுக்காக நெப்போலியன் அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் நேஷ்வில்லில் வசித்து வருகிறார். சமீபத்தில் நெப்போலியன் தனது மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் கோலாகலமாக நடத்தினார். தற்போது அவரது மருமகளும் தனுஷுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

தனுஷின் Golden Birthday!
இந்த நிலையில் நெப்போலியன் தனது மகன் தனுஷின் 27 ஆவது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். தனுஷின் பிறந்தநாளை குறித்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் நெப்போலியன். அதில், “அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, உங்களது அன்பாலும், ஆசீர்வாதத்தாலும், தனுஷுடைய 27வது பிறந்தநாளை , அதாவது தனுஷுடைய Golden Birthday வை அக்ஷயாவுடனும், எங்கள் நேஷ்வில் குடும்ப நண்பர்களுடனும் சேர்ந்து நாங்கள் மகிழ்ச்சியாக July 27லி்ல் எங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம்…!
நன்றி..!” என குறிப்பிட்டுள்ளார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தனுஷ் தனது மனைவியுடன் அன்பை பரிமாறிக்கொள்ளும் தருணங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
