ARTICLE AD BOX
கார் ரேஸ்தான் வாழ்க்கையே
சமீப மாதங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் அஜித்குமார் கார் ரேஸில் மிகவும் ஆர்வமாக ஈடுபாடு காட்டி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. பல நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் தனது அணியுடன் கலந்துகொள்ளும் அஜித்குமார் பல போட்டிகளில் பரிசுகளை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்து வருகிறார்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு இத்தாலியில் அமைந்துள்ள தனது ரோல்மாடலான அயர்டன் சென்னாவின் நினைவு சிலைக்கு அஜித்குமார் மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் தனது ரோல்மாடலான அயர்டன் சென்னாவின் நினைவாக ரேஸ் கார் ஒன்றை தற்போது விலைக்கு வாங்கியுள்ளார் அஜித்குமார்.

இவ்வளவு கோடியா?
இங்கிலாந்தைச் சேர்ந்த மெக்லாரன் ஆட்டோமேட்டிவ் என்ற நிறுவனம் அயர்டன் சென்னாவின் நினைவாக இந்த ரேஸ் காரை வடிவமைத்துள்ளது. இந்த ரேஸ் காரின் விலை ரூ.10 கோடி என கூறப்படுகிறது. இந்த கார் பந்தயத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷல் எடிஷன் எனவும் கூறுகின்றனர். இந்த காரை விலைக்கு வாங்கியுள்ள அஜித்குமார் இதனுடன் எடுத்த வீடியோ ஒன்றை தனது Ajithkumar Racing எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அஜித்குமார் தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வருகிறார். வருகிற நவம்பர் மாதம் முதல் அஜித்குமார் சினிமாவுக்கு கம்பேக் கொடுக்கவுள்ளார். அஜித்குமாரின் 64 ஆவது திரைப்படத்தை “குட் பேட் அக்லி” திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
Senna brought to life with Ajith Kumar bringing the Mc Laren Senna home!#ajithkumar pic.twitter.com/Pu3SzHstnu
— Ajithkumar Racing (@Akracingoffl) June 4, 2025He dreamt
He saw
He owns. #AjithKumarRacing#mclarensenna #ajithkumar pic.twitter.com/T7vSsWq8s3