தனித்து போட்டியிட்டால் தவெகவுக்கு நல்லது : விஜய்க்கு அட்வைஸ் செய்த ஹெச் ராஜா!

1 month ago 28
ARTICLE AD BOX

மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே ஜீன் 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது, இம்மாநாட்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மதுரை சின்ன சொக்கிக்குளத்தில் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பாஜக தேசிய செயற்க்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் “டாஸ்மாக் ஊழலில் அமலாக்கத்துறை அறிக்கை வந்தவுடன் திமுக அரசுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்தியுள்ளது, அமலாக்கத்துறைக்கு விசாரணையில் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக உள்ளனர்.

எங்கேயும் ஒடி, ஒழிந்தாலும் உப்பு திண்ணவன் தண்ணீ குடிக்க வேண்டும், ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி குடும்பமே டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்டுள்ளது.

ஊழல் விவகாரம் குறித்த தகவல்கள் திமுக அரசுக்கு 4 மாதங்களுக்கு முன்பே தெரிய வந்ததால் ஊழலை மடைமாற்றும் விதமாக திமுக அரசு மும்மொழி கொள்கை குறித்து பேசினார்கள்.

அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின்னர் இந்த ஊழலில் இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என தெரியவரும். ஆப்ரேசன் சிந்தூரில் ஆகாஷ், பிரமோஷ் ஏவுகணைகள் ரியல் ஹிரோவாக செயல்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளுக்கு இணங்கி போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் போர் மோடியின் பலவீனத்தை காட்டுகிறது என தமிழகத்தில் உள்ள முட்டாள்கள் பேசியுள்ளது, நாட்டிற்கு எதிராக செயல்வடுவதை ராகுல்காந்தி வழக்கமாக கொண்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பாக்., இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையை சிக்கந்தர் மலை என கூறி தீய சக்திகள் அபகரிக்க நினைக்கிறது, 2026 ல் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என திமுக கனவு காண அவர்களுக்கு உரிமையுள்ளது, யார் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு என்ன வந்தது?, கூட நட்பு கேடாய் முடியும் என சொன்ன திமுக தற்போது காங்கிரஸ் கூட கூட்டணி வைத்துள்ளது.

காங்கிரஸ் கூட கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கு வெட்கமாகமில்லை, திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு சூடு, சொரனையில்லை. அதிமுக – பாஜக கூட்டணிக்கு பின்னர் திமுகவுக்கு தோல்வி பயத்தை காட்டுகிறது.

தவெக விஜய் தனித்து நின்று தேர்தலில் போட்டியிடுவது நல்லது, தவெக விஜய் கூட்டணி வைப்பதும், தனித்து போட்டியிடுவதும் அவரது விருப்பம்” என கூறினார்.

  • aarti said that the accusation which ravi mohan put on her is not truth வீட்டோட மாப்பிள்ளையா? எல்லாமே பொய்- ரவி மோகனுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த ஆர்த்தி!
  • Continue Reading

    Read Entire Article