ARTICLE AD BOX
சேலம் தாரமங்கலத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி சின்னப்பிள்ளைக்கு 74 வயதாகிறது. கடந்த 20ஆம் தேதி இறந்து கிடந்தார்.
இதையும் படியுங்க: பவன் கல்யாண், நயினார், அண்ணாமலையை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்க.. கமிஷ்னரிடம் புகார்!
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த தாரமங்கலம் போலீசார், விசாரணை நடத்தினர். சின்னப்பிள்ளைக்கு லட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணை வளையத்திற்குள் பிரகாசை இழுத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில், பிரகாஷ் மனைவி பிரிந்து சென்றதால் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும் பாட்டியிடம் அவ்வப்போது பணம் வாங்கி சூதாடியுள்ளார்.
 சம்பவத்தன்று சூதாட பணம் கேட்டு பாட்டியை டார்ச்சர் செய்துள்ளார். அவர் பணம் தர மறுக்கவே, பாட்டி என்று கூட பாராமல், பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்து தப்பியோடினார்.
போலீசாரிடம் இருந்து மாட்டிக் கொள்ளாமல் இருக்க திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று மொட்டை போட்டுள்ளதாகவும் பிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
 
                        4 months ago
                                48
                    








                        English (US)  ·