ARTICLE AD BOX
தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் இதனை கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்ட சுமார் 600-காப்பங்கள் மூடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய விவகாரத்தில் உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய அவர், பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழக அரசின் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின்பு அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கே இளம் பகவத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
