ARTICLE AD BOX
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் பால் மாருதி (32) என்பவர். இவர் இந்திய ராணுவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது மதுரையில் உள்ள தனது மனைவியின் இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது சொந்த ஊரான அனுமந்தம்பட்டியில் தனது நண்பரின் திருமணத்திற்காக நேற்று வருகை தந்தவர் இரவு அனுமந்தன்பட்டி அருகில் உள்ள தனியார் விடுதியில் (ஜெ.ஜெ. ரெசிடென்சி) தங்கியிருந்துள்ளார்
இதையும் படியுங்க: வாரச் சந்தையில் வியாபாரம் செய்த மூதாட்டிக்கு மிரட்டல்.. திமுக நிர்வாகி அட்டூழியம்.. ஷாக் வீடியோ!
காலையில் நீண்ட நேரம் ஆகியும் மாருதி வராத காரணத்தினால் ராணுவ வீரரின் நண்பர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்று பார்க்கும் பொழுது அங்கு அவர் பேச்சு மூச்சின்றி இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் மற்றும் விடுதியின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்
இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பால் மாருதியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பால் மாருதி இரவு மதுபோதையில் சிகரெட் குடித்து விட்டு சிகரெட் நெருப்பை அணைக்காமல் போட்டதாகவும், அப்போது மெத்தையில் சிறிய அளவு ஏற்பட்ட நெருப்பில் இருந்து புகை வெளியாகி அறை முழுவதும் புகை ஏற்பட்ட நிலையில் மது போதையில் இருந்த பால் மாருதிக்கு சுவாசிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உடற்கூராய்வு செய்த பின் இறப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர். ராணுவத்தில் பணியாற்றுபவர் சொந்த ஊர் அருகே மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
