ARTICLE AD BOX
பிச்சைக்காரராக அசத்திய தனுஷ்
தனுஷின் “குபேரா” திரைப்படம் தமிழகத்தில் கொஞ்சம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. ஆனால் தெலுங்கில் இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை ரசித்து பார்த்து வருகிறார்கள். குறிப்பாக பிச்சைக்காரராக நடித்த தனுஷின் நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் நேற்று “குபேரா” திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் “குபேரா” படக்குழுவினரும் தெலுங்கின் பிரபல நடிகரான சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அந்த விருதுக்கே அவமானம்?
இந்த நிலையில் அவ்விழாவில் பேசிய சிரஞ்சீவி, “குபேரா படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் என்னை கவர்ந்திருந்தாலும் தேவா கதாபாத்திரம் என் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனுஷை தவிர இந்தியாவில் வேறு எந்த நடிகரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது” என பாராட்டியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “குபேரா படத்திற்காக நிச்சயம் நீங்கள் தேசிய விருது வெல்வீர்கள். ஒரு வேளை அப்படி வெல்லவில்லை என்றால் அந்த விருதுக்கு மதிப்பே இல்லை” எனவும் கூறியுள்ளார்.
“குபேரா” படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் புகழ்ந்திருந்த நிலையில் தற்போது தெலுங்கின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.