தனுஷ் இயக்கத்தில் அஜித்தா…தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்.!

1 month ago 32
ARTICLE AD BOX

தனுஷ் – அஜித் கூட்டணி

நடிகர் அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.இந்த படம் 2025 ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இதையும் படியுங்க: தரமான சம்பவம்.!ராபின்ஹூட் படத்தில் ‘டேவிட் வார்னர்’ நடிக்கும் ரோல் என்னனு தெரியுமா.!

இப்படத்திற்குப் பிறகு அஜித்–தனுஷ் இணையும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ஒரு YouTube பேட்டியில் பேசிய போது,தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் தகவலை உறுதி செய்தார்.

படத்திற்கான “முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என கூறியதால்,இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் இதற்கு முன்பு பா.பாண்டி,ராயன்,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளதால்,தனுஷ் – அஜித் கூட்டணி உறுதி செய்யப்பட்டால்,தமிழ் சினிமாவில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தனுஷ் இயக்கத்தில் அஜித்தா…தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்.!
  • Continue Reading

    Read Entire Article