ARTICLE AD BOX
தனுஷ் 54 அப்டேட்!
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட்டில் “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தனுஷின் 54 ஆவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.
கிரைம் திரில்லர் திரைப்படம்?
தனுஷின் 54 ஆவது திரைப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இவர் “போர் தொழில்” என்ற மாஸ் ஹிட் திரைப்படத்தை இயக்கியவர். தனுஷின் 54 ஆவது திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
— Vels Film International (@VelsFilmIntl) July 10, 2025இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். மேலும் இதில் ஜெயராம், கே எஸ் ரவிகுமார், சுராஜ் வெஞ்சரமுடு, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். “போர் தொழில்” திரைப்படம் அசரவைக்கும் கிரைம் திரில்லராக உருவாகியிருந்த நிலையில் தனுஷ் நடிக்கும் 54 ஆவது திரைப்படம் அதே போன்ற ஒரு கிரைம் திரில்லராக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.