ARTICLE AD BOX
தனுஷ்-விக்னேஷ் ராஜா கூட்டணி
“இட்லி கடை”, பாலிவுட்டில் “தேரே இஷ்க் மே” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் “போர் தொழில்” இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க உள்ளார். தனுஷின் 54 ஆவது திரைப்படமான இதனை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார்.
இதில் தனுஷிற்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். மேலும் இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமுடு, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

மூக்கை நுழைக்கும் ஓடிடி நிறுவனம்?
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தை ஏற்கனவே ஓடிடி நிறுவனம் ஒன்றிற்கு விற்றுவிட்டார்களாம். அந்த ஓடிடி நிறுவனம் இத்திரைப்படத்தின் டைட்டிலை ஒரே வார்த்தையில் இருக்கும்படியும் அதுவும் ஆங்கிலத்தில் வைக்குமாறும் கண்டிஷன் போட்டுள்ளதாம்.
இத்திரைப்படத்தை மற்ற மொழிகளிலும் பிசின்ஸ் செய்ய அது உதவியாக இருக்கும் என அவ்வாறு கூறியதாம். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் இத்திரைப்படத்தின் டைட்டிலை ஆங்கிலத்தில் வைக்குமாறு இயக்குனரை கேட்டுக்கொண்டுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவருகிறது.
திரைப்படங்களின் வெளியீட்டு தேதியை சமீப காலமாக ஓடிடி நிறுவனங்களே முடிவு செய்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது திரைப்படங்களின் டைட்டிலிலும் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என பலரும் விமர்சித்து வருகின்றனர்.