ARTICLE AD BOX
தனுஷ் மற்றும் அமலாபால் நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. தனுஷ் கேரியரில் அவருக்கு 25வது படம். இந்த படத்தை வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியது.
வேலையில்லா இளைஞர்களின் வலியை உணர்த்திய அந்த படம் மெகா ஹிட் ஆனது. தனுஷ் – அமலாபால் ஜோடியையும் ரசிகர்கள் வரவேற்றனர்.
இதையும் படியுங்க: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அதிரடி முடிவெடுத்த ஜனநாயகன் படக்குழு? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
இந்த படம் குறித்து அண்மையில் பேசிய அமலா பால், தனுஷ்க்கு நான் ஜோடியாக நடித்த படம் அது. படப்பிடிப்பு சமயத்தில் கேரவனில் நாங்க ஒன்றாகத்தான் சாப்பிடுவோம்,
தனுஷ் பார்க்கத்தான் ஒல்லி, ஆனா நிறையா சாப்பிடுவாரு. முழுக்க முழுக்க சைவ உணவை விரும்பி சாப்பிடும் தனுஷ், அசைவம் என்றால் முட்டையை மட்டும் சேர்த்துக்கொள்வார்.

சாப்பிடும் போது செல்போனில் கவுண்டமணி காமெடியை பார்த்து சாப்பிடும் பழக்கம் அவருக்கு உண்டு. கவுண்டமணியின் தீவிர ரசிகர் தனுஷ் என அமலா பால் கூறியுள்ளது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
