ARTICLE AD BOX
தனுஷின் புதிய திரைப்படம்
தனுஷ் நடிப்பில் ஷேகர் கம்முலா இயக்கத்தில் வருகிற ஜூன் 20 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் “குபேரா”. இதில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஷேகர் கம்முலா, புஷ்கர் ராம் மோகன் ராவ், சுனில் நரங் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது.
 படத்தின் நீளம்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இத்திரைப்படத்தின் நீளம் குறித்து ஒரு தகவல் வெளிவந்தது. அதாவது இத்திரைப்படம் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் நீளம் கொண்டது என ஒரு தகவல் வெளிவந்தது. இத்தகவலால் ரசிகர்கள் பலரும் “இவ்வளவு பெரிய படமா?” என அதிர்ச்சியடைந்தனர்.
 இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தனஞ்சயன், “குபேரா திரைப்படம் 3 மணி நேரத் திரைப்படம் இல்லை. அவர்கள் மீண்டும் படத்தை எடிட் செய்து 2 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய திரைப்படமாக உருவாக்கியுள்ளார்கள். இது குறித்து குபேரா படக்குவினரே என்னிடம் கூறினார்கள். அந்த படத்தின் நீளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தனர். சென்சார் செய்து முடித்துள்ள நிலையில் 2 மணி நேரம் 50 நிமிடங்களாக தற்போது குறைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களை சற்று ஆசுவாசப்படுத்தியுள்ளது.
 
                        4 months ago
                                38
                    








                        English (US)  ·