தமிழக அரசை விமர்சித்து டிவிட்டர் பதிவு? நெட்டிசன்களின் வளையத்தில் சிக்கிய மாரி செல்வராஜ்! 

1 month ago 18
ARTICLE AD BOX

தமிழகத்தை உலுக்கிய ஆணவ கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த கவின் என்பவர் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்தவர். கவின் பல ஆண்டுகளாகவே திருநெல்வேலியைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவர் கவினை தனியாக அழைத்துச் சென்று தனது சகோதரியுடனான பழக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என மிரட்டியுள்ளார். 

இது குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டி கொலை செய்துவிட்டு தனது பெற்றோர் துணையுடன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். சுர்ஜித்தின் தந்தை, தாய் ஆகிய இருவருமே காவல்துறை உதவி ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Mari selvaraj condemn honor killing on kavin murder

இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் கவினை கொலை செய்தவரையும் அந்த கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்திற்கு முன் கொண்டு வந்து அவர்களுக்குரிய உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என பலரும் தங்களது குரல்களை எழுப்பி வருகின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக சுர்ஜித்தின் பெற்றோரும் காவல்துறை உதவி ஆய்வாளர்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மாரி செல்வராஜின் டிவிட்!

இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், தனது எக்ஸ் தளத்தில் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்டது குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்… சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆக வேண்டும்” என பதிவிட்டுள்ளார். 

நீளும்
சாதிய அருவருப்பின்
அட்டூழியம் …
சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான
நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்.@CMOTamilnadu @mkstalin @Udhaystalin pic.twitter.com/1MAlKzZHCz

— Mari Selvaraj (@mari_selvaraj) July 29, 2025

மாரி செல்வராஜின் இப்பதிவு இணையத்தில் வைரல் ஆன நிலையில் நெட்டிசன்கள் பலரும், “அஜித்குமார் கொலை செய்யப்பட்டபோது கோமாவில் இருந்தீங்களா சார்?”, “சத்தமாக பேசாதீங்க, திமுகவுக்கு காது கேட்டுவிடும்” என அவரது கம்மண்ட் பகுதியில் விமர்சித்து வருகின்றனர். 

மாரி செல்வராஜ் சாதிய ஏற்றத்தாழ்வுகளை விமர்சித்து பல படங்களை இயக்கி வருகிறார். மேலும் அவர் உதயநிதி ஸ்டாலினுடன் மிகவும் நட்போடு பழகி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. 

  • Mari selvaraj condemn honor killing on kavin murder தமிழக அரசை விமர்சித்து டிவிட்டர் பதிவு? நெட்டிசன்களின் வளையத்தில் சிக்கிய மாரி செல்வராஜ்! 
  • Continue Reading

    Read Entire Article