ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் அரசியலில் பல மாற்றம் நிகழ்ந்து வருகிறது. திமுகவை எதிர்த்து பல கட்சிகள் ஒன்றாக சேர முடிவெடுத்துள்ளன.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கோபால், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.
அண்மையில் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் திமுக எம்பி திருச்சி சிவா இதுவரை மன்னிப்பு கேட்காத நிலையில், காங்கிரஸ் மேலிடமும் பெரியதாக கண்டுகொள்ளாதி நிலையில் அதிருப்தியில் காங்., நிர்வாகிகள் உள்ளனர்.
இதனிடையே பாஜகவில் இணைந்த கோபால், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்வதை தான் விரும்பவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
