ARTICLE AD BOX
நாடு முழுவதும் நாளை ஆட்டோ மற்றும் பேருந்துகளை சேவைகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விலைவாசி உயாவு உள்ளட்ட 17 அம்ச கோரிக்கைகளைய வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கள் இந்த அறிவிப்பை ளியிட்டுள்ளது.
நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சிஐடியு, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இதையும் படியுங்க: அஜித் மரணத்தில் தவறு செய்தவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் : நடிகர் மன்சூர் அலிகான் காட்டம்!
அரசு அலுவலர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். இதனால் ஆட்டோ, பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பயணங்கள் பாதிக்கப்படும் இந்த சூழலில் பொதுமக்கள் முன் கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் வேண்டுகோளும் விடுத்துள்ளன. மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மக்கள் மாற்று போக்குவரத்து வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திமுகவுடன் இணைந்த தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு தனியார் மற்றும் ஆட்டோக்கள் இயங்காமல் இருக்கலாம் என்பதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாக உள்ளது குறிப்பிடத்தக்குது. அதே சமயம் பயணிகள் பாதிக்காத வண்ணம் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவது தொடர்பாக மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.