ARTICLE AD BOX

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. நான்கு முனைப் போட்டியாக களம் அமைந்துள்ள நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலும், அவர்களுக்கான சின்னமும் வெளியிடப்பட்டு விட்டது.
ஆனால், வேட்புமனு தாக்கல் செய்தது முதலே மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆட்டோவில் பயணித்தபடி, வீதிவீதியாக தாமரை சின்னத்திற்கு ஆதரவை தருமாறு கேட்டு வருகிறார். பொதுமக்களும் திரண்டு நின்று பெருவாரியான ஆதரவை அவருக்கு வழங்கி வருகின்றனர்.
சாலையோர வியாபாரிகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை குறி வைத்தே அவர் தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார். இன்று புரசைவாக்கம் பகுதியில் வாக்குசேகரித்த பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்திற்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பையும், ஆதரவையும் கொடுத்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் அவரை வரவேற்றனர்.
இதனிடையே, கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் இருந்து மாலை நேர பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில், “இங்கிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினேன் என்றும், இங்கிருந்து வரலாற்றை மாற்றி எழுதுவோம், தமிழகத்தில் மாற்றத்திற்கான நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, பிரச்சாரத்தில் பேசிய அவர், தேர்தலுக்கு பிறகும் உங்களை தொகுதியில் சந்திக்கும் எம்பியாக இருப்பேன் என்றும், தற்போதைய திமுக எம்பி தயாநிதி மாறன், அவரது குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதிலேயே தீவிரம் காட்டி வருவதாகவும், மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை உடனுக்குடன் செய்து கொடுப்பேன் என்றும் வாக்குறுதியளித்தார்.
மேலும், விளையாட்டு மைதானங்களில் பெண்கள் விளையாடுவதையே யாராவது பார்த்துள்ளீர்களா..? தொகுதியில் உள்ள மகளிர் மீது அக்கறையே இல்லாதவராக தற்போதைய எம்பி இருக்கிறார். முதலில் தொகுதியில் எத்தனை வார்டுகள் இருக்கிறது, வார்டுகளில் உள்ள தெருக்களின் பெயர் அடிப்படை விவரமாவது அவருக்கு தெரியுமா..? என்று கேள்வி எழுப்பினார்.
The station தமிழகத்தில் மாற்றத்திற்கான நேரம் இது… கோபாலபுரத்தில் வாக்குசேகரித்த பாஜக வேட்பாளர் உறுதி..!!! archetypal appeared connected Update News 360 | Tamil News Online.