ARTICLE AD BOX
விஜய் தொலைக்காட்சியின் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் யோகி பாபு. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு அதன் பின் டாப் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கினார். அது மட்டுமல்லாது ஹிந்தியில் ஷாருக்கானின் “சென்னை எக்ஸ்பிரஸ்”, “ஜவான்” போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார். இவ்வாறு மிகவும் பிசியான நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு.

எனினும் சமீப காலமாக அவரது நசைச்சுவை அவ்வளவாக ஒர்க் அவுட் ஆகவில்லை என விமர்சனங்கள் எழுகின்றன. சமீபத்தில் அவர் விஜய் சேதுபதியின் “தலைவன் தலைவி” திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். ஆனால் அதில் அவரது காமெடி ரசிக்கும்படியாக இல்லை என பலரும் விமர்சித்து வந்தனர். எனினும் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகளில் பிசியாக வலம் வருகிறார் யோகி பாபு.
இந்த நிலையில் யோகி பாபு தற்போது ஒரு தெலுங்கு சினிமா உலகில் அறிமுகமாகவுள்ளார். அதாவது பிரபல தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தமும் இயக்குனர் முரளி மனோகர் ரெட்டி என்பவரும் இணைந்து “குர்ராம் பாபி ரெட்டி” என்ற திரைப்படத்தை உருவாக்கவுள்ளனர்.

இத்திரைப்படத்தை முரளி மனோகர் ரெட்டி இயக்கவுள்ளார். இதில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக யோகி பாபுவும் பிரம்மானந்தாவும் சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் யோகி பாபுவுக்கு பிரம்மானந்தன், தனது சுயசரிதையான “நான் பிரம்மானந்தம்” என்ற புத்தகத்தையும் பரிசளித்தார்.
