ARTICLE AD BOX
இந்திய நடிகர்
தமிழில் “அலைபாயுதே” திரைப்படத்தின் மூலம் இளம் பெண்களின் மனதை கொள்ளைகொண்ட மாதவன், அதனை தொடர்ந்து பல வெரைட்டியான கதையம்சங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்தார். எனினும் அவர் ஒரு கட்டத்திற்குப் பிறகு பாலிவுட்டில் கால் பதித்து அங்கே பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இந்திய நடிகராக உருவானார். பாலிவுட்டில் தற்போது, “தே தே பியார் தே 2”, “துரந்தர்” போன்ற திரைப்படங்களில் மாதவன் நடித்து வருகிறார்.

தமிழும் பேசுவேன், ஹிந்தியும் பேசுவேன்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் மாதவனிடம் மொழி மற்றும் பிரதேச பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மாதவன், “பல்வேறு கலாச்சாரங்களையும் மொழிகளையும் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் எனது வாழ்க்கை மேம்பட்டுள்ளது. நான் தமிழ் பேசுவேன், ஹிந்தி பேசுவேன். நான் கோலாப்பூரிலும் படித்திருக்கிறேன். நான் மராத்தியும் கற்றுக்கொண்டேன். ஆதலால் நான் மொழியின் காரணமாக எனக்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை” என கூறியுள்ளார்.
தற்போது, தமிழ்-ஹிந்தி, மராத்தி-ஹிந்தி ஆகிய மொழி பிரச்சனைகள் குறித்து தீவிரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் மாதவனின் இந்த பதில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
