ARTICLE AD BOX
வேலூரில் ஏழு தளங்களுடன் சுமார் 198 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்க: போதையின் பிடியில் தமிழ் திரையுலகம்? ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து சிக்கிய மற்றுமொரு நடிகர்!!
பின்னர் அவர் அளித்த பேட்டியில், மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு மற்றும் முருகன் மாநாட்டில் பெரியார் குறித்து வெளியிடப்பட்ட காணொளி குறித்து கேட்டதற்கு, பார்க்கப்போனால் தமிழ் கடவுள் முருகனுக்கு நெருக்கமானவர் நான்தான்.
ஏனென்றால் அவர் கையில் வேல் உள்ளது என் பெயரில் வேல் உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் அறநிலையத்துறை சார்பில் ஓராண்டுக்கு முன்பு முத்தமிழ் முருகன் சிறப்பான மாநாடு பழனியில் நடத்தப்பட்டது.
அதில் எந்த அரசியல் அடையாளமும் கிடையாது. அந்த மாநாடு சிறப்பாக அமைந்தது அனைத்து தரப்பினரும், அனைத்து அடிகளார்களும் கலந்து கொண்டார்கள். அதில் அரசியல் சாயங்கள் எதுவும் இல்லை.
ஆனால் மதுரையில் நடத்தப்பட்ட மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டு நடத்தப்பட்டது. அரசியல் நோக்கம் தான் அவர்களின் முழுமையான முழுமையான முழுமையான நோக்கம்.
அவர்கள் போட்ட தீர்மானமே அரசியல் உள்நோக்கத்தோடு உடையது தான்.
முருகன் மாநாட்டுக்கும், இந்துக்கும், தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்.
ஆக தேர்தலுக்காக போடப்பட்ட மாநாட்டில் எப்படி எங்கள் முதல் தலைமுறையாய் இருக்கிற பெரியாரையும், அண்ணாவையும் ஏற்றுக் கொள்வார்கள்.
அவர்கள் நோக்கம் முருகன் வெளிப்படுத்துவது அல்ல. அவர்களைப் பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் தனது இருப்பிடத்தை காட்டிக் கொள்வதற்காக அந்தந்த மாநில கடவுள்களை கையில் எடுப்பார்கள்.
அந்தந்த மாநிலத்தில் உள்ள கடவுளை முன்னிறுத்தி பின்னால் அரசியல் செய்பவர்கள் இவர்கள். பெரியாரையோ, அண்ணாவையோ பாராட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவும் மாட்டோம் அவர்களும் அதை செய்ய மாட்டார்கள். இதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் தேர்தல் நேரத்தில் அதற்குரிய பங்களிப்பை செலுத்துவார்கள்.
முதல்வர் ரோட்சோ இருக்குதா என கேட்டதற்கு,பொதுமக்களை சந்திப்பதன் பொருள் என்ன, மக்களை சந்திப்பது தான் அதன் பொருள் என கூறினார்.