ARTICLE AD BOX
நான் காலி…
“வாயை மூடி பேசவும்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இவர் பிரபல தமிழ் கிளாசிக் எழுத்தாளரான சாண்டில்யனின் மகள் வழி பேரன் ஆவார். முதல் திரைப்படத்திலேயே ஹிட் பாடல்களை கொடுத்த ஷான் ரோல்டன் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ரசிக்கும்படியான பல பாடல்களை கொடுத்து வருகிறார்.
“குட் நைட்” படத்தில் இடம்பெற்ற நான் காலி, “லவ்வர்” படத்தில் இடம்பெற்ற “தேன்சுடரே” போன்ற பாடல்கள் பலரையும் அசரவைத்தது. இவரின் குரல் இவருக்கு மிகப்பெரிய பலமாகும்.
டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்த “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ஷான் ரோல்டன், “புதுமை என்பது ஒரு தொடர்ச்சிதானே தவிர வழக்கத்திற்கு மாறாக செய்வது இல்லையே. முகைமழை என்ற வார்த்தையை சொன்னால் இதில் Vibe இல்லையே ப்ரோ என்று சொல்வார்கள்.
நான் என்ன கேட்கிறேன் என்றால், தமிழ் சினிமா பாடலில் ஒரு அழகான தமிழ் வார்த்தையை கூட எழுத இங்கு இடமில்லையா? நாமளும் தங்கிலிஷில் பாடல் எழுதுகிறோம். ஆனால் தமிழுக்கு அதில் இடம் வேண்டும் அல்லாவா? தமிழ் நமது காதுகளில் விழ வேண்டும் அல்லவா?” என பேசியது பலரையும் யோசிக்க வைக்கும்படி இருந்தது.
“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் வாழும் ஒரு இலங்கை தமிழ் குடும்பம் எப்படிப்பட்ட சவால்களை எல்லாம் எதிர்கொள்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை என டிரைலரை பார்க்கும்போது தெரிய வருகிறது. இத்திரைப்படம் காமெடி கலந்து ஒரு ஃபேமிலி டிராமாவா உருவாகியுள்ளதாகவும் தெரிய வருகிறது.