ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் ஜாதி!
பொதுவாக பல்வேறு துறைகளில் ஜாதி பாகுபாடு இருப்பது போல் தமிழ் சினிமாத்துறையிலும் ஜாதி பாகுபாடு அதிகளவில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக இயக்குனர் பா ரஞ்சித் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பிறகு இந்த விமர்சனம் குறித்த உரையாடல் அதிகமானது. பா ரஞ்சித்தை தொடர்ந்து மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரும் ஜாதி பாகுபாடு குறித்து பேசியும் அது குறித்து படங்கள் இயக்கியும் கவனத்தை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கலையரசன் “டிரெண்டிங்” என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேடையில் கொந்தளித்த கலையரசன்
“டிரெண்டிங்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கலையரசன், “தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் இங்கு ஜாதி மிகவும் மோசமான அளவில் இருக்கிறது. நான் இயக்குனர் பா ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று பேசியுள்ளார். இவரது இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பா ரஞ்சித்தின் “மெட்ராஸ்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற கலையரசன், அதனை தொடர்ந்து பா ரஞ்சித்தின் “கபாலி”, “சார்பட்டா பரம்பரை” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது பா ரஞ்சித்தின் “வேட்டுவம்” திரைப்படத்தில் கலையரசன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.