ARTICLE AD BOX
கம்பேக் கொடுக்கிறாரா பாவனா
பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அவர்கள்,சில வருடங்களில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தேர்வு செய்து விடுவார்கள்.
இதையும் படியுங்க: என் உயிருக்கு ஆபத்து..விருதை திருப்பி கொடுக்கிறேன்…பிரபல இயக்குனர் ட்வீட்.!
அப்படிப்பட்ட நடிகைகளில் ரசிகர்களின் மனதில் இன்னும் மறக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் பாவனா.சமீபத்தில் ஒரு பேட்டியில்,ஏன் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் என்பதற்கான விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கிய பாவனா,2006ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்த அவர்,அதன் பிறகு வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆனால் சில காரணங்களால் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
பாவனா சமீபத்தில் அளித்த பேட்டியில்,கடந்த 16 ஆண்டுகளில் பல தமிழ் இயக்குநர்கள் தன்னை அழைத்து கதைகளை கூறியதாக தெரிவித்தார்.ஆனால்,படக்குழுவினருக்கும் தன்னுக்கும் சரியான தொடர்பு இல்லாததால் சில படங்கள் கைநழுவியதாகவும்,சில படங்களின் கதை தனது விருப்பத்திற்கு பொருந்தாததால் தமிழ் சினிமாவைத் தொடர முடியாததாகவும் கூறினார்.
பாவனா தற்போது “தி டோர்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் திரும்பியுள்ளார்.ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரது நடிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் மலையாள திரையுலகில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஹேமா கமிட்டி’ விவகாரத்தில் அவரது பெயர் அடிக்கடி குறிப்பிடப்பட்டது.
இப்போது மீண்டும் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள பாவனாவை ரசிகர்கள் திரையில் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

9 months ago
110









English (US) ·