ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் கடின உழைப்பால் வளர்ந்து, திறமையால் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள நடிகர் மணிகண்டன. தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருவெடுத்துள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம், குட்நைட், லவ்வர், குடும்பஸ்தன் படம் நல்ல வரவேற்பை பெற்று மணிகண்டனின் நடிப்பை பாராட்டி பேசப்பட்டது.
இதையும் படியுங்க: கூடவே ஒட்டிட்டு வராதே : கேசட்டால் நயன்தாரா – விக்கி எடுத்த முடிவு!
இந்த நிலையில் மணிகண்டனின் பெரும்பாலான படங்களில்ங தெலுங்கு நடிகைகளே நடித்து வருகின்றனர். இதனால் அவர் தமிழ் நடிகைகளை புறக்கணிக்கின்றார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இது குறித்து அவரே கூறியதாவது, படத்தோட ஹீரோயின் தேர்வில் எல்லாம் நான் தலையிடுவதில்லை. அதெல்லாம் இயக்குநரின் வேலை. அவர்களுடன் நடி என்றால் நான் நடித்துவிட பேகிறேன். அவ்வளவுதான்.
நான் தெலுங்கு நன்றாக பேசுவேன். அதனால் தெலுங்கு நடிகைகளுடன் நடிப்பது எனக்கு சுலபமாகிவிட்டது. இதில் காமெடி என்னவென்றால் அடுத்தது நான் நடிக்கும் படத்தில் கூட தெலுங்கு நடிகைதான் என கூறி சிரித்தார்.