ARTICLE AD BOX
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு என்ற அறிவிப்பை நாடே உற்று நோக்கியது.
கடந்த 2019ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படியுங்க: அரசியல் வியாபாரமாகிவிட்டது… சாதி, மதத்தை விற்று பொழப்பு நடத்துறாங்க : நடிகர் ரஞ்சித் காரசார கருத்து!
அப்போதை ஆட்சியில் இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருந்ததாக கூறப்பட்டதால் வழக்கு சிபிஐக்கு மாறியது. 6 வருடங்களாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இந்தக் கொடூரம் 2019இல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தது.
கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல பெண்கள் மோசடியாக கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, வீடியோ பதிவு செய்யப்பட்டு மிரட்டப்பட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் கைதான 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது கோவை மகிளா நீதிமன்றம்.
மேலும் தண்டனை விபரங்கள் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ தலையிட்டு விசாரித்த போது, சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், பாபு, மணிவண்ணன், ஹெரன் பால், அருளானந்தனம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்கேமரா என்ற முறையில் தனியறையில் விசாரணை நடைபெற்றது.
இதில் நேரடியாக 8 கல்லூரி மாணவிகள் சாட்சியளித்துள்ளனர். ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை என்பதால் வழக்கு எந்த தொய்வும் இல்லாமல் விசாரிக்கப்ப்டடது. சாட்சி விசாரணை மற்றும் இருதரப்பினர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வாசித்தார்.
9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இன்று நண்பகல் 12 மணிக்கு தண்டனை விபரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனிடையே பேட்டி கொடுத்த அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர மோகன், ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதால், குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

5 months ago
76









English (US) ·