ARTICLE AD BOX
தனுஷ் மீதான வதந்திகள்
கோலிவுட்டில் எந்த ஜோடிக்கு விவாகரத்து ஏற்படுகிறது அந்த ஜோடிகளை எல்லாம் தனுஷோடு தொடர்புபடுத்தி, “இவர்களின் விவாகரத்திற்கு காரணம் தனுஷ்தான்” என வதந்தி பரப்புவது சமீப காலமாக வழக்கமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரவி மோகன்-ஆர்த்தி ஜோடி பிரிந்த நிலையில் ஆர்த்தியையும் தனுஷையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார் பாடகி சுசித்ரா. இதனை தொடர்ந்து இணையத்தில் இது குறித்த வதந்திகளும் பரவியது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற “குபேரா” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தன் மீதான வதந்திகள் குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க
“நான் வழி தெரியால் இருட்டில் முழிக்கும்போதெல்லாம் மேலே இருந்து கண்ணுக்கு தெரியாத ஒரு கை எனது கையை பிடித்து கூட்டிக்கொண்டு போகும். அந்த சமயத்தில் எல்லாம் எனது ரசிகர்கள் எல்லாம் தீப்பந்தம் போல் எரிந்து எனக்கு வெளிச்சம் காட்டுவார்கள். நீங்கள் என்னை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளை பரப்புங்கள்.
என்னை குறித்து என்ன வேண்டுமானாலும் எதிர்மறையான செய்திகளை பரப்பிவிடுங்கள். ஒரு ஒரு முறையும் எனது திரைப்படம் வெளியாவதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பு எதிர்மறையான பிரச்சாரங்களை ஏத்திவிட்டு பரப்பிவிடுங்கள். அந்த கண்ணுக்கு தெரியாத கையும் எனது ரசிகர்கள் ஒவ்வொருத்தரும் தீ பந்தமாக எரிய அதன் வழியில் நான் போய்க்கொண்டே இருப்பேன்.
தம்பிங்களா, கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்கள் ராசா. இங்கே இருப்பவர்கள் எல்லாம் எனது ரசிகர்கள் மட்டும் கிடையாது. 23 வருடங்களாக என் கூடவே வந்த தோழர்கள். என்னுடைய வழித்துணை. நீங்கள் சும்மா ஒரு நான்கு வதந்திகளை பரப்பி இதனை காலி செய்துவிட வேண்டும் என நினைத்தால் அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை” என குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி தன் மீதான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தனுஷ்.
தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள “குபேரா” திரைப்படம் வருகிற 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

5 months ago
64









English (US) ·