ARTICLE AD BOX
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி
ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று இரவு சொன்ன படி 7.03 க்கு வெளியாகி இணையத்தில் பல சாதனைகளை புரிந்து வருகிறது.
இதையும் படியுங்க: நான் யாருனு காட்டுறேன்…நெருப்பை பற்றவைத்த ‘குட் பேட் அக்லி’ டீசர்.!
இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர்,இதனால் படத்தின் டீசர் அப்டேட்டை சமூகவலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டது.
அதன் படி நேற்று வெளியான டீசரில் அஜித்தின் மாஸ் லுக்குக்கு பஞ்சமே இல்லாத வகையில் இயக்குனர் ஆதிக் செதுக்கியுள்ளார்,ஆதிக் தீவிர அஜித் ரசிகர் என்பதால் அஜித்தின் பழைய படங்களின் கெட்டப்களை அஜித்திற்கு வைத்து அழகு பார்த்துள்ளார்,மேலும் தெறிக்கவிடும் வசனங்களும் டீசரில் மிரட்டி இருக்கிறது,பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளதால் அஜித்தின் மாஸ் சண்டைக்காட்சிகள் பட்டையை கிளப்பி,அஜித் ரசிகர்களுக்கு தரமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசர் வெளியான சில நேரத்திலே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது 20 மில்லியனுக்கு மேல் பார்த்துள்ளனர்,விஜயின் மாஸ்டர் பட டீசர் 24 மணி நேரத்தில் 19.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி அந்த சாதனையே 24 மணி நேரத்திற்குள் முறியடித்து,மின்னல் வேகத்தில் சென்று ட்ரெண்டிங் NO 1-ல் உள்ளது.

8 months ago
119









English (US) ·