ARTICLE AD BOX
காசு மழையில் டிராகன்
கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டிராகன்,இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் வசூல் செய்து வருகிறது.
இதையும் படியுங்க: டி.ராஜேந்திரனுக்கு என்ன ஆச்சு…ஆளே அடையாளம் தெரியல..வைரலாகும் போட்டோ.!
சில நாட்களுக்கு முன்பு படம் 100 கோடி பாக்ஸ் ஆபிசில் இணைந்து சாதனை படைத்தது.இப்படத்தில் பிரதீப்புடன் அனுபமா,கயாடு லோஹர்,மிஸ்கின்,கவுதம் வாசுதேவ்மேனன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருப்பார்கள்,மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் பக்கா கமர்சியல் படமாக அமைந்துள்ளது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியால் பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்து வருகின்றன,இந்த நிலையில் தற்போது 18 நாளை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடி வரும் இப்படம் 140 கோடி வசூலை குவித்துள்ளது.
மேலும் இப்படம் மார்ச் 21 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது,இதனால் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.