ARTICLE AD BOX
முன்னணி வில்லன் நடிகர்
தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தொடக்கத்தில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றினார். அதனை தொடர்ந்து “வாலி”, “குஷி” ஆகிய மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கிய “நியூ” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அத்திரைப்படங்கள் சரியாக போகவில்லை. அதனை தொடர்ந்து வில்லன் நடிகராக களமிறங்கினார் எஸ்.ஜே.சூர்யா. அவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் பிக்கப் ஆன நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லனாக ஒப்பந்தமானார். தற்போது “LIK”, “இந்தியன் 3” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
நான் மட்டும் இல்லைன்னா…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ், “என்னால்தான் அந்த ஆள் (எஸ்.ஜே.சூர்யா) சினிமாவில் இருக்க காரணமே. நான் இல்லை என்றால் எஸ்.ஜே.சூர்யா சினிமாவிலேயே இருந்திருக்க முடியாது. எஸ்.ஜே.சூர்யா தமிழில் நடித்த எந்த திரைப்படமும் ஓடவில்லை. படம் இயக்குவதற்கான வாய்ப்பும் அமையவில்லை.
இதனால் எஸ்.ஜே.சூர்யா தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்திற்கு வந்தார். அந்த சமயத்தில்தான் நான் அவருக்கு உதவி செய்தேன். வா நண்பா, நான் இருக்கிறேன் என்று அவரை ஒரு தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று இசை படத்தை அவர் இயக்க நா உதவினேன்” என்று கூறினார். இவர் இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா குறித்து பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.