ARTICLE AD BOX
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்க, திரிஷா, சிம்ரன், பிரியா வாரியர், பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்க: ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
நேற்று வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், முதல் நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் ரூ.2.5 கோடி வசூல் செய்துள்ளது.
தமிழ்கம் முழுவதும் ஒரே நாளில் ரூ.35 கோடிக்கும் மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ள நிலையில், தொடர்ந்து வார விடுமுறை என்பதால் படத்தின் வசூல் 100 கோடி ரூபாயை சுலபமாக தாண்டிவிடும். அஜித்துக்கு இந்த படம் ஒரு மைல்கல்லாக அமையும் என கூறப்படுகிறது.

6 months ago
62









English (US) ·