ARTICLE AD BOX
பிசியான இசையமைப்பாளர்
சமீப காலமாக தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். பெரிய ஹீரோ திரைப்படங்கள் என்றாலே அனிருத்தை இசையமைப்பாளராக புக் செய்து விடுவார்கள். அந்தளவிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத்.
தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், விஜய்யின் “ஜனநாயகன்” திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.அது போக அஜித்தின் 64 ஆவது திரைப்படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் அனிருத் பட்டையை கிளப்பி வருகிறார். இவ்வாறு மிகவும் பிசியாக வலம் வரும் அனிருத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் விளையாடிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தல தோனியுடன் விளையாடிய ராக்ஸ்டார்!
அதாவது சென்னையில் ஒரு விளையாட்டு அரங்கை அவர்கள் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து Padel என்ற விளையாட்டை விளையாடினார்கள். இந்த வீடியோதான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
MS Dhoni and Anirudh are playing padel together 😍🔥 pic.twitter.com/DV3oDkDAcD
— ` (@WorshipDhoni) August 7, 2025
தல தோனியுடன் ராக்ஸ்டார் அனிருத்? வைரல் வீடியோவால் குஷியில் ரசிகர்கள்!

2 months ago
28









English (US) ·