ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமம் உள்ளது, இப்பகுதி அருகே உள்ள கரட்டின் உச்சியில் அடையாளம் தெரியாத உடல் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்தது.
இரு துண்டுகளாக கால்பகுதி மற்றும் உடல் பகுதியாக கிடப்பதாகவும் தலைப்பகுதி இல்லாமல் இருந்த நிலையில், அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அம்மையநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
காவல் ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமயிலான குழுவினர் கிராம நிரவாக அலுவலர் சோபனா தலைமையில் மலைக்கரட்டின் உச்சிப்பகுதிக்கு சென்று சிதைந்த உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அருகே உள்ள மரத்தில் தூக்கு கயறு இருந்தது.
கால்சட்டைப்பையில் வைத்திருந்த பணப்பையில் (மணி பர்ஸ்) நிரந்தர கணக்கு அட்டை ( பான் கார்டு) மற்றும் கனரா வங்கி ஏடிஎம் அட்டை ஆகியவற்றைக்ககொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேம்மாபட்டு மேற்குத்தெருவைச் சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் சம்பத்-24 என்பது தெரிவந்தது. மேலும் சக்திவேலுக்கு 3 மகன்கள் உள்ள நிலையில் சம்பத் பிடெக் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஶ்ரீபெரும்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.

சகோதரர் ஶ்ரீதரன் ஶ்ரீபெரும்புத்தூர் காவல்நிலையத்தில் அண்ணணைக் காணவில்லை என்று இரண்டரை மாதங்களுக்கு முன்பு மே மாதம் 13-ம் தேதி புகார் ஒன்றை அளித்து தேடிவந்த நிலையில், சம்மந்தமே இல்லாம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட ஒரு குக்கிராமத்தின் மலைக்கரட்டுப் பகுதியின் உச்சியில் அழுகி சிதைவுற்று தலையில்லாமல் இரு துண்டுகளாக பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரயில் பயணச்சீட்டு பையில் இருப்பதால் அருகில் உள்ள கொடைரோடு இரயில் நிலையத்திலிருந்து நடந்து வந்தாரா அல்லது ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்தாரா இவருடன் இதே பகுதியைச் சேர்ந்த யாரும் வந்துள்ளனரா அல்லது வேறு யாரும் உடன் வந்தார்களா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு எப்படி வந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடலைக்கைப்பற்றி உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
