ARTICLE AD BOX
இயக்குநர் அட்லீ தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம் வந்தார். ராஜா ராணி படம் மூலம் எண்ட்ரி கொடுத்த அவர் தொடர்ச்சியாக விஜயை வைத்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.
தொடர்ந்து ஹிட் படங்களை அளித்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்தார். இதனால் தமிழ் சினிமா இவரை கொண்டாடியது. உடனே தனது ரூட்டை மாற்றிய அட்லீ, பாலிவுட்டுக்கு சென்றார்
இதையும் படியுங்க : ரஜினிக்கு மனைவியா நடிக்க வாங்க…பிரபல நடிகையிடம் மர்ம நபர் மோசடி.!
பாலிவுட்டில் நுழைந்ததும் முதல் படம் ஷாருக்கானை வைத்து இயக்கினார். ஜவான் படம் அங்கு பயங்கர ஹிட் அடித்தது மட்டுமல்லாமல், உலகளவில் ₹1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது.
இதனால் பாலிவுட்டும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்தது. இதையடுத்து தமிழில் வெற்றியடைந்த தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். பேபி ஜான் என்ற பெயரில் படத்தை அட்லீ தயாரிக்க, அவரது உதவி இயக்குநர் படத்தை இயக்கினார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ நடித்த அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.
இதனால் பயங்கர நஷ்டம் அடைந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனிடையே அடுத்தடுத்து படத்தை இயக்குவதில் பிஸியாக உள்ளார் அட்லீ. அடுத்த படத்தை அல்லு அர்ஜூனை வைத்து இயக்க முடிவெடுத்தார்.

அதன் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் இந்த படத்தை ஒப்புக்கொண்ட சன் பிக்சர்ஸ், அட்லீயின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்து போனதாம். அதாவது 55 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என அட்லீ கூறியுள்ளார்.
இதனால் பின் வாங்கிய சன் பிக்சர்ஸ். தொடர்ந்து படத்தை எடுக்க தில் ராஜூவிடம் பேசியுள்ளார் அட்லீ, அவரோ கேம் சேஞ்சர் படத்தால் கடும் நஷ்டமடைந்ததாக கூறி விலகினார்.

இதனிடையே அட்லீ சம்பளத்தை உயர்த்தியதற்கு காரணம் என்ன என்று சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டது. பேபி ஜான் படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்ததால், அதை சரி செய்ய தனது சம்பளத்தை ஏற்றியுள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் கும்பிடு போட்டு எஸ்கேப் ஆகி வருகின்றனர்.
