ARTICLE AD BOX
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் நடிகர் விஜய். இவர் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
இதையும் படியுங்க: அமேசான் வைத்த ஆப்பு… ரஜினி மகளுக்கே இந்த நிலைமையா?
வெளிநாட்டில் படித்து வந்த ஜேசன் சஞ்சய். குறும்படம் ஒன்று இயக்கி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், லைகா நிறுவனம் அவரை வைத்து படம் இயக்க முடிவு செய்தது.
கடந்தாண்டு இறுதியில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உட்பட பலர் நடிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இதனிடையே தொடர் தோல்விகளால் லைகா நிறுவனம் துவண்டுள்ளது. இதனால் விஜய் மகனை வைத்து படத்தை எடுக்கும் முடிவை நிறுத்தலாம் என லைகா முடிவு செய்ததாகவும், ஆனால் விஜய் மகன் தனது JSJ மீடியா என்டெர்டெயின்மெண்ட் மூலம் இணை தயாரிப்பாளராக இருந்து கைக்கொடுதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று வெளியிட்ட மேக்கிங் வீடியோவில், JSJ மீடியா பெயரும் போஸ்டரில் இணைக்கப்பட்டுள்ளது இந்த விஷயத்தை உறுதிசெய்துள்ளது.
