ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பழைய வக்கம் பட்டி பகுதியில் உள்ள தனிநபருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இன்று காலை இப்பகுதி வழியாக சென்றவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கூறினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
விசாரணையில் அவர் மைக்கல் பட்டியை சேர்ந்த பிச்சை மகன் 32 வயதான சிவகுமார் என்பது தெரிய வந்தது. மேலும் இப்பகுதி முழுவதும் தலை கிடைக்கிறதா என்று காவல்துறையினர் சுற்றிப் பார்த்தபோது இப்பகுதியில் எங்கும் சிவகுமாரின் தலை இல்லை.
இதனால் கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்கள் தலையை வெட்டி கையோடு எடுத்துச் சென்று விட்டாரா அல்லது வேறு பகுதியல் வீசி விட்டு சென்றுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் எதற்காக கொலை செய்யப்பட்டார் கொலை செய்ததற்கான காரணம் என்ன? யார் கொலை செய்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்

சம்பவ இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் நேரடியாக ஆய்வு செய்து இப்பகுதியில் விசாரணை செய்தார்.
தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மர்ம நபர்களால் வாலிபர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது
