தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…

1 week ago 18
ARTICLE AD BOX

கலவையான விமர்சனம்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான “குபேரா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் பாதி மிகவும் அருமையாக இருப்பதாகவும் ஆனால் இரண்டாம் பாதியில் பொறுமையை சோதித்துவிட்டார்கள் எனவும் படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர். எனினும் தனுஷின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருந்ததாகவும் பிச்சை எடுக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்கவைத்துவிட்டதாகவும் பாராட்டி வருகின்றனர். 

blue sattai maran troll dhanush for speak like rajinikanth

படத்துல நல்லா நடிச்சாலும்…?

இந்த நிலையில் இத்திரைப்படத்தை தனது வீடியோ ஒன்றில் விமர்சித்த ப்ளு சட்டை மாறன், “படத்தில் தன்னை கொலை செய்ய முயல்பவர்களிடம் இருந்து தனுஷ் தப்பித்து ஓடத்துவங்கியதில் இருந்து படம் நீட்டி படுத்துவிட்டது. அவர் தப்பித்து ஓட ஓட கதை நகரவேண்டும் அல்லவா? கதை நகரவே இல்லை, கதை ஆரம்பித்த இடத்திலேயேதான் இருக்கிறது. அவர் மட்டுந்தான் நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டு இருக்கிறார். 

இந்த படத்தில் பெரிய பிரச்சனை என்னவென்றால், எந்த ஒரு கதாபாத்திரத்தையுமே ஒழுங்காக வடிவமைக்கவில்லை. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் முக்கிய கதாபாத்திரமான நாகர்ஜுனா கதாபாத்திரத்தை பொறுத்தவரை, அவர் நல்லவரா? இல்லை கெட்டவரா? என அவருக்கே தெரியவில்லை. அவரே குழப்பத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறார். அதே போல் ஹீரோ அறிவாளியா? முட்டாளா? என அவருக்கே தெரியவில்லை. ராஷ்மிகா கதாபாத்திரம் படத்தில் எதற்கு என்றே தெரியவில்லை” என கூறினார்.

blue sattai maran troll dhanush for speak like rajinikanth

மேலும் பேசிய அவர், “தனுஷிடம் என்ன பிரச்சனை என்றால், திரைப்படங்களை பொறுத்தவரை அவர் நன்றாக நடித்துவிடுகிறார். ஆனால் மேடையில் கோட்டை விட்டுவிடுகிறார். என்னதான் வசனங்களை எல்லாம் மனப்பாடம் செய்துவிட்டு உடல்மொழியை தயார் செய்துவிட்டு ‘தலைவர்’ போல் வாயை கோணலாக வைத்துக்கொண்டு பேசினாலும் நம்மாட்கள் கண்டுபிடித்து கலாய்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். தனுஷ் தலைவர் போல் பேசுவதற்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்து வரவேண்டும்” என தனது ஸ்டைலில் கலாய்த்துள்ளார். இது தனுஷ் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. 

  • blue sattai maran troll dhanush for speak like rajinikanth தலைவர் மாதிரி பேசுறதுக்கு இன்னும் பயிற்சி வேணும்? தனுஷை கண்டபடி கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்…
  • Continue Reading

    Read Entire Article