ARTICLE AD BOX
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே 400 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
முன்னதாக மேடை அமைக்க காவல் துறை அனுமதி மறுத்த நிலையில் லாரியை நிறுத்தி மேடையாக்கி அதில் நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்பாட்டத்தில் பேசிய இசுலாமிய பெண் நிர்வாகி ஒருவர் பிரதமர் மோடிக்கு பதில் கொடுக்க விரும்புவதாகவும், இந்தியை திணிக்கும் அவருக்கு இந்தியிலேயே பதில் கொடுக்க விரும்புகிறேன் என கூறி இந்தியில் பேசினார்.

அப்போது “தமிழை மோடிக்கு பிடிக்கும் ஆனா பிடிக்காது, தமிழக மக்களின் ஓட்டு வேண்டும் ஆனா தமிழக மக்கள் வேண்டாமா? நமக்கு மோடி வேண்டும் அவருக்கு நாம் வேண்டாம்” என பேசியவர், தமிழகத்தில் தளபதி விஜய் முதல்வர் ஆனால் அங்கு ராகுல் பிரதமர் ஆவார்.

இப்போது ராகுலை கூட உள்ளவர்களே ஏமாற்று கிறார்கள். தளபதி வந்தால் தான் ராகுல் பிரதமர் ஆவார் வேறு வழியில்லை என பேசி புது கூட்டணி கணக்கை கூறினார்.
