ARTICLE AD BOX
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த இளைஞர் அஜித்குமார், போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: சப்தமே இல்லாமல் கமுக்கமாக ஓடிடியில் வெளியான தக் லைஃப்! ஷாக்கில் ரசிகர்கள்!
இந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில், சம்மந்தப்பட்ட காவலர்களை மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும்கட்சி மீது அதிரடி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.
இந்த நிலையில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்திற்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் அவரது தாய் மற்றும் தம்பி நவீன் குமாரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அஜித்குமார் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டது குறித்து அஜித்குமாரின் தம்பி நவீன்குமாரிடம் கேட்டு வருத்தம் தெரிவித்தார்.
தவெக என்றும் துணைநிற்கும் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கூறிய விஜய் தவெக சார்பில் இறந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் இழப்பீடு தொகை ரொக்கமாக வழங்கினார்.

4 months ago
41









English (US) ·