ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 13-ஆம் தேதி திருச்சியில் பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார்.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கடந்த சனிக்கிழமை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தார்.
அப்போது சுற்றுப்பயணம் தொடர்பாக மனு அளிப்பது காவல்துறை அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்பது இடத்தை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்வது தொடர்பாக வருகை புரிந்தார்.

புஸ்ஸி ஆன்ந்தை வரவேற்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் ஏராளமான த.வெ.க தொண்டர்கள் குவிந்தனர். விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் சொல்லியும் த.வெ.க தொண்டர்கள் கலைந்து செல்லாமல் அங்கே கூட்டமாக கூடினர்.
மேலும், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற த.வெ.கவினர் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பியும், வாகனங்களை நிறுத்தியும், பொதுமக்களுக்கு இடையே ஏற்படுத்தினர்.

தொடர்ந்து விமானத்திற்கு வெளியே உள்ள கோயிலில் புஸ்ஸிஆனந்த் சாமி தேசம் செய்த பின்பு வெளியே வந்த போது காவல்துறையினருக்கும் தொண்டர் கடைய வாக்குவாதம் ஏற்பட்டது.

இது தொடர்பாக போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தியும், காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தும், சட்ட விரோதமாக ஒன்று கூடியும் , காவல்துறையினரிடம் வாக்கு வாதம் செய்ததாக த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி கிழக்கு மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் உள்ளிட்ட 6 பேர் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய காவல்துறையினர் 4பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
