ARTICLE AD BOX
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது மாலை 3:30 மணி முதல் ஆறு முப்பது மணி வரை மற்றும் நாளை மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரை என இரண்டு பிரிவுகளாக கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இதில் கட்சியின் தலைவரும் அதிகமான விஜய் பங்கேற்கிறார்.
இதையும் படியுங்க: விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
இந்த நிலையில் கூட்டம் நடைபெறும் அரங்கை கட்சியின் தேர்தல் பிரச்சார பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,அதிமுக திமுக போன்ற கட்சிகளுக்கு தான் வாக்குச்சாவடி முகவர்கள் அதிக அளவில் இருக்கும் . தமிழக வெற்றி கழகத்தின் உண்மையான கட்டமைப்பு என்ன என்பது இன்று முழுமையாக தெரியவரும் என்றும் கூறினார்.
மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இந்த கருத்தரங்கத்தில் தேர்தலை எப்படி சந்திப்பது என்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் மக்கள் பிரச்சனை குறித்தும், இப்போது இருக்கக்கூடிய ஆட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் மக்களோடு எப்படி சேர்வது என்பது குறித்தும் அண்ணன் சொன்னது போல மக்களோடு சேர் மக்களோடு வாழ் என்ற அடிப்படையில் மக்களிடம் செல்வதற்கான அரசியல் பயிற்சி அரங்கம் இன்று நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.

அதிமுக திமுக என்ற இரண்டு பெரிய கட்சிக்கு மத்தியில் மூன்றாவது கட்சியில் முதன்மைக் கட்சி என்பது வருகின்ற தேர்தலில் தெரியவரும் எனவும் அதற்கான முதல் நாளாக இன்றைய நாளை கருதுகிறேன் எனவும் கூறியதுடன்,க்யூ ஆர் கோட் உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கிறோம்.
முறையான கருத்தரங்க அட்டவணைகளை வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொடுத்திருக்கிறோம். கருத்தரங்கம் முடிந்தபின் முறையாக அனைத்து தகவல்களையும் ஊடகத்திற்கு தருகிறோம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 69 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளதாகவும் 3 இலட்சம் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா கூறினார்.

6 months ago
55









English (US) ·