ARTICLE AD BOX
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் விறுவிறுவென தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
ஒரு பக்கம் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திமுக, தனது கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. மறுபக்கம் அதிமுக, பாஜக உடன் கூட்டணியை அமைத்து தீவிரமாக மக்களை சந்தித்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுள்ளது.
சூழல் இப்படியிருக்க, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம், 2026 தேர்தலை குறி வைத்து தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது. திமுகவுக்கு எதிராக தவெகதான் என விஜய் மக்களை சந்தித்து ஆளுங்கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் ஆரம்பத்தில் விஜய் கட்சி தொடங்கும் போது தன்னுடன் தான் கூட்டணி வைப்பார் தம்பி என சீமான் உணர்ச்சி பொங்க பேசி வந்தார்.
ஆனால் விஜய் முதல் மாநாட்டை நடத்தியது முதல், அவர் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகிறார் சீமான். உச்சக்கட்டமாக விஜய் தொண்டர்களை அணில்கள் என ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் கூறி வருவது தவெகவனிரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பி தம்பி என அழைத்து வந்த சீமான், தற்போது விஜய்யை அவதூறாக பேசி வருகிறார். இதற்கு பின்னணியில் பிரபல அரசியல் கட்சி உள்ளதாகவும், ரூ.100 கோடி பேரம் பேசியதாகவும், அதனால் தவெகவை பற்றி அவதூறாக பேசி வருவதாகவும், வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி பரபரப்பு பேட்டி கொடுத்துள்ளார்.
இது குறித்து வலைப்பேச்சு வாய்ஸ் என்ற தளத்தில் பிஸ்மி கூறியதாவது, பிரபல அரசியல் கட்சி வாரிசிடம் ரூ.100 கோடி வாங்கியதாகவும், இதில் முன்னாள் அமைச்சரும் உள்ளடி வேலை பார்த்தாகவும் கூறியுள்ளார்.
பிஸ்மி கூறியுள்ளது உண்மையா இல்லையா என்பதை தெரியிவில்லை. இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிரான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
