ARTICLE AD BOX
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது.
தற்போது தாடி வைத்த கணவனை பிடிக்காத மனைவி கொளுந்தனுடன் ஓடிச் சென்றுள்ளார். மீரட் நகரில் 7 மாதம் முன்பு ஜாகீர் என்பவரை திருமணம் செய்துள்ளார் அர்ஷி.
இதையும் படியுங்க: பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!
ஜாகீர் முஸ்லீம் மதப்படி தாடியை வளர்த்து வந்துள்ளார். ஆனால் அர்ஷிக்கு தாடியை பிடிக்கவில்லை. ஷேவ் செய்து சுத்தமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் ஜாகீர் இதற்கு உடன்பட மறுத்துள்ளார். இந்த நிலையில் தான் ஜாகீரின் தம்பி ஷபீர் உடன் அர்ஷிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.
ஷபீர் தாடி வைக்காமல் எப்போதும் க்ளீன் ஷேவ் செய்து சுத்தமாக இருப்பவர். இதனால் அவருடன் காதல் மலர்ந்தது. இதனிடையே ஷபீருடன் அர்ஷி மாயமானார். பல இடங்களில் தேடிய கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் கொளுந்தனுடன் அர்ஷி பெற்றோர் வீட்டு வந்துள்ளார். பின்னர் காவல் நிலையத்துக்கு சென்று, எனக்கு ஜாகீருடன் வாழ விருப்பமில்லை. தாடி எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை, பாலியல் ரீதியாக அவர் தகுதியற்றவர் என கூறியுள்ளார்.
இதைக் கேட்டு மனம் நொந்த ஜாகீர், காவல் நிலையத்திலேயே விவாகரத்து செய்வதாக சொல்லிட்டு புறப்பட்டுள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தை உலுக்கியுள்ளது.