தாம்பரத்தில் கொலை.. செஞ்சியில் உடல் புதைப்பு.. Ex MP உதவியாளர் கொடூர கொலையின் பின்னணி என்ன?

1 month ago 41
ARTICLE AD BOX

முன்னாள் எம்பி உதவியாளரும், திமுக நிர்வாகியுமான குமாரை நிலத்தகராறில் கொலை செய்து செஞ்சியில் புதைத்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம்: சென்னை, அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (71). இவர் திமுகவின் தொமுச சங்க நிர்வாகியாக உள்ளார். மேலும், இவர் முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளராக இருந்தவர் ஆவார். இதனிடையே, இவரது உறவினர் ஒருவர் மும்பையில் உள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளது.

இந்த இடத்தை ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ரவி என்பவர் போலிப் பத்திரங்கள் தயார் செய்து, இடத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர், கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை அமைத்து மோசடி செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்தத் தகவல் மும்பையில் உள்ள இடத்தின் உரிமையாளருக்கு தெரியவர, உடனடியாக குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் சென்று பார்த்தபோது, நில மோசடி நடப்பதைக் கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், இரு தரப்பும் தங்களது நிலத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். அதில், குமாரின் உறவினருடைய ஆவணங்களே உண்மையானது எனத் தெரிய வந்துள்ளது.

Gingee Murder

இதனால், ரவி தரப்பு, குமார் மேல் கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி, சென்னையில் உள்ள குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ரவி, இடம் தொடர்பாகச் சந்திக்க வேண்டும் என தாம்பரம் வரும்படி கூறியுள்ளார்.

எனவே, குமார் ஆட்டோவில் அன்று பிற்பகல் தாம்பரம் வந்துள்ளார். இவ்வாறு தாம்பரம் வந்த பின்பு அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆனதுடன், அவர் எங்கு சென்றார் எனத் தெரியாத நிலையில், பல இடங்களில் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர், இது குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் அவருடைய மருமகன் மோகன் புகார் அளித்துள்ளார்.

எனவே, தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர் கடைசியாக பேசிய செல்போன் எண்ணைக் கொண்டு காவல் நிலையம் அழைத்து வந்து தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து செஞ்சி அருகே புதைத்தது தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணையில், திருப்போரூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறி காரில் அழைத்துக் கொண்டு சென்று உள்ளனர். காரில் ஊரப்பாக்கம் பகுதியைத் தாண்டியவுடன், ஈசிஆர் இடம் தொடர்பாக நீ ஏன் தலையிடுகிறாய் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: துரைமுருகன் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்.. கூட்டணி கட்சித் தலைவர் குமுறல்!

ஒருகட்டத்தில், ஆத்திரத்தில் கயிறால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்பு, சடலத்தைக் கொண்டு போய் செஞ்சி வனப்பகுதி அருகே ஆற்றுப் படுகையில் புதைத்துவிட்டு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரவியைக் கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகளான போரூர் அருகேயுள்ள ஐயப்பந்தாங்கலைச் சேர்ந்த விஜய் (38), செந்தில் குமார் (38) ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், பிடிபட்டவர்களை செஞ்சி அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டி சடலத்தை அதிகாரி முன்னிலையில் தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி, ஒலக்கூர் கிராமத்தில் புதைத்த இடத்தில் வட்டாட்சியர் ஏழுமலை ஆய்வு நடத்தியுள்ளார்.

  • Trisha Krishnan என்னங்க சொல்றீங்க? த்ரிஷா படைத்த உலக சாதனை.. ஆனால் ‘அது’..!
  • Continue Reading

    Read Entire Article