ARTICLE AD BOX
கோவை தொண்டாமுத்தூர் உலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவர் எல்.ஐ.சி முகவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா, மகன் ராகுல் (வயது 15) தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள வித்ய விகாஸ் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடன் படிக்கும் நண்பர்கள் சிலர் செல்போன் வைத்து இருந்ததால் தனக்கும் செல்போன் வேண்டும் என வீட்டில் அடம் பிடித்து கேட்டு உள்ளார்.
இதையும் படியுங்க: 1,210 கிலோ கஞ்சா… 600 போதை மாத்திரைகள்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!
இதனைத் தொடர்ந்து பெற்றோர் வாங்கித் தர மறுத்ததால், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி அவரது தாயின் புடவையால் வீட்டில் காலில் உள்ள இரும்பு கிராம்பில் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனைக் கண்ட அவரது தாய் சுஜாதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகன் ராகுலை மீட்டு பார்த்தபோது உடல் சூடாக இருந்ததால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ராகுலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து ராகுலின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைத்து உள்ளனர்.

இதுகுறித்து ராகுலின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனுக்காக 11 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.